இணையமும் மணக்குது :)

0
228

திருமணம் ஆகி தனிக்குடித்தனம் போகும் பெண்களுக்கு அம்மாக்கள் கொடுக்கும் ஒரு விலை மதிப்பில்லாத சீதனம், சமையல் துணுக்குகள் தான். அது சரி, கொஞ்சமாச்சும் சாமியால் தெரிந்தால் துணுக்குகள் சொல்லலாம், சமையலே தெரியாதவர்களுக்கு? டைரி போட்டு எழுதிக்கொடுப்பது எல்லாம் அந்தக் காலம். “என் பொண்ணு விவரம் தெரிஞ்சவ, இன்டர்நெட் பாத்து சமைச்சு பொழச்சுக்குவா” என்று பெண்ணை பெற்ற அம்மாக்கள் கெத்து போட ஆரம்பிச்சுட்டாங்க. அட ஆமாங்க! சமையல்-ல அரிச்சுவடி-ல ஆரம்பிச்சு அட்டை டூ அட்டை வரை சமையலில் வறுத்து தாளிக்க (?!) புட் ப்ளாஸ் (Food blogs), யூடுப் சானல்கள் (YouTube channels) நிறைய வந்தாச்சு. இன்டர்நெட் பாத்து சமைக்கிற எல்லாருக்கும் ரொம்ப பரிச்சயமானது, .http://www.rakskitchen.net/-ல் கமகம-க்கிற ரெசிப்பீஸ் ராஜேஸ்வரி-யின் கைமணம் தான். யுவதி-காக ஒரு சின்ன உரையாடல்,

உங்களுக்குதெரிஞ்ச சமையல் நுணுக்கங்களை உலகிற்கு பகிரும் எண்ணம் எப்படி வந்தது?

திருமணம் ஆன பிறகு, எல்லோரையும் போல், நானும் சமையல் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்த பொழுது, அம்மா, மாமியாரிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் சமையல், புதிதாக ஏதேனும் சமைத்துப்பார்த்தால் அதை முன்பெல்லாம் சமையல் குறிப்பாக, நோட்டில் எழுதி வைத்துக்கொள்வேன். ஒரு கட்டத்தில், நம்மை போல புதிதாக கற்றுக்கொள்பவருக்கு உபயோகமாக இருக்க வேண்டும் என்று நினைத்து, நான் வலைத்தளத்தில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். நானும் இதே போல சில வலைத்தளங்களில் பார்த்தும் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.  இதனால் பிற்காலத்தில் அதே சமையல் குறிப்பை நானும் பார்த்து சமைப்பதற்கும் உதவும் , பிறருக்கும் உபயோகமாக இருக்கும்.

புகைப்படத்தோடசமையலை எளிமையாக சொல்வது தன் உங்கள் வலைப்பூவின் தனிச்சிறப்புஇதற்காகவே நிறைய உழைப்பு தேவைப்படுமே?

ஆமாம், நான் சமைக்கக்கற்றுக்கொண்ட பொழுது, என்ன தான் நம் வீட்டில்

உள்ளவர்களிடம் தொலைபேசியில் கேட்டோ, வலைத்தளத்தில் படித்தோ செய்தலும், நடுநடுவே, நிறைய சிறு சிறு சந்தேகங்கள் எழும். குறிப்பாக சமையல் பற்றி ஒன்றுமே தெரியாத பெண்கள்/ ஆண்கள் முதல் முறை சமைக்கும் பொழுது எழும் சந்தேகங்கள், ஒவ்வொரு நிலையிலும் நாம் சமைக்கும் ரெசிபி சரியாக வருகின்றதா என சரி பார்த்துக்கொள்ள உதவும். மேலும் ஒருவர் இந்த புகைப்படங்களை மட்டும் பார்த்தாலே, படிக்காமலே அந்த ரெசிபி பற்றிய ஒரு ஐடியா கிடைக்கும். இது தான் அதன் தனி சிறப்பு.

ஒருபுட் ப்ளாக் ஆரம்பிக்க எனென்ன விஷயங்கள் தேவை?

சமையல் பற்றி முதலில் நமக்கு சொல்லித்தரும் அளவிற்காவது தெரிந்திருக்க

வேண்டும். அளவு, செய்முறையை தெளிவாக புரியும்படி சொல்லும் ஆற்றல். இணையதளம் / கம்ப்யூட்டர் பற்றி சிறிது தெரிந்திருக்க வேண்டும். இணையதளம்,ஒரு கம்ப்யூட்டர்/ லேப்டாப். ஒரு தெளிவான புகைப்படம் எடுத்து தரும் கேமரா/மொபைல் போனிலேயே இதை நாம் எளிதாக செய்யலாம்.

நம்மஊர் மட்டும் அல்லாமல் பல மாநிலபல ஊர்பல நாட்டு சமையல் வகைகள் எல்லாம் செய்கிறீர்களேஎப்படி?

இணையத்தளத்தில், youtube , Instagram , pinterest , facebook போன்ற சமூக வலைத்தளங்களை பார்க்கும் பொழுது, அதில் பகிரப்படும் நிறைய ரெசிபிக்கள்

பார்த்தவுடன் செய்யத்தூண்டும் வகையில் உள்ளன. சமையலில் ஆர்வம்

இருக்கும் எவரும் இதனை செய்ந்துபார்ப்பார்கள். நானும் அதனை, என்

குடும்பத்திற்கேற்ப சிறிது மாற்றங்கள் செய்து, முயற்சி செய்து, நன்றாக வந்தால், எல்லோர்க்கும் உபயோகப்படும் வகையில் பகிர்கிறேன்.

இல்லத்தரசியா வீட்டையும்தனி ஆளாக ப்ளாக்ஐயும் எப்படி நிர்வகிக்கிறீர்கள்?

 என்னுடைய கணவரும், பிள்ளையும் சென்றபிறகு, வீடு வேலைகளை

முடித்துவிட்டு, நிறைய நேரம் எனக்கு கிடைத்தது. அந்நேரத்தை உபயோகமாக

ஏதேனும் செய்யலாம் என்றே பிளாக் ஆரம்பித்தேன். என் பிள்ளை

பள்ளியிலிருந்து வரும் வரை என்னால் பிளாகிற்காக செலவிட முடியும்.

சிவரஞ்சனி ராஜேஷ்