பட்டர் பன்னிர் மசாலா

0
267
Paneer Butter Masala Recipe (Restaurant Style Recipe) | VegeCravings
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 3 நறுக்கியது
பெங்களூர் தக்காளி – 3 நறுக்கியது
பன்னிர் – 200 gm
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 25 gm
தனி வர மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
சீரகத் தூள் – 3/4 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கிட்சன் கிங் ( Kitchen king)  – 1/2 டீஸ்பூன்
எண்ணைய் – 2 டேபிள் ஸ்பூன்
கசூரி மேத்தி ( Kasuri methi ) – சிறிது
கொத்தமல்லி தழை – சிறிது
செய்முறை: 
 • நறுக்கிய வெங்காயம் தக்காளி இரண்டையும் குக்கரில் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி,  சிறிதளவே உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் சத்தம் வரை வேக வைத்து ஆற வைக்கவும்
 • முந்திரியை சிறிது வெதுவெதுப்பான நீரில் கால் மணி நேரம் ஊறப் போட்டு மிக்ஸி விழுதா அரைத்து வைத்துக் கொள்ளவும்
 • ஆற வைத்த வெங்காயம் தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்
 • பன்னிரை சதுரங்களாக விருப்பமான அளவில் நறுக்கி வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு வைக்கவும்
 • வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த வெங்காய விழுது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5-10 நிமிடங்கள் வதக்கி விடவும்
 • இஞ்சி பூண்டு வாசனை வரும் போது மிளகாய் தூள், சீரகத் தூள் சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் வெளிவரும் வரை வதக்கவும்
 • பிறகு அரைத்த முந்திரி விழுதும் , மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு வைத்த பன்னிர் தூண்டுகளை வடித்து எடுத்து அதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும்
 • இப்போது தேவையான அளவு உப்பு,  சர்க்கரை,  கிட்சன் கிங் மசாலா பொடி சேர்க்க வேண்டும்
 • எண்ணைய் வெளிவரும் வரை மிதமான தீயில் வைத்து அவ்வப்போது கிளறி விடவும்
 • பிறகு ஃபிரெஷ் க்ரீம் , கசூரி மேத்தி சேர்த்து கிளறி, பரிமாறும் பாத்திரத்தில் மாற்றவும்
 • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி, மேலாக வெண்ணெய் போட்டு பிறகு பரிமாறவும்.
# கிட்சன் கிங் – Kitchen king மசாலா பொடி வெவ்வேறு ப்ராண்டுகளில் கடைகளில் கிடைக்கிறது, இதில் கரம் மசாலா வாசனை அதிகம் இருக்காது
# இஞ்சி பூண்டு விழுது வீட்டில் அரைத்ததே நல்ல வாசனை கொடுக்கும்
# கசூரி மேத்தி- Kasuri methi காய்ந்த வெந்தய கீரை, பல நன்மைகள் உள்ளது, ஜீரணத்திற்கு உதவும், கடைகளில் கிடைக்கிறது
# ஃபிரெஷ் க்ரீம் – Fresh cream கடைகளில் கிடைக்கிறது, மேலும் அதற்கு பதிலாக பால் ஏடு ஒரு டேபிள் ஸ்பூன் மிக்ஸில் அரைத்துக் கொண்டு அதை சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.
பத்ம ப்ரியா