கொஞ்சம் யோசிங்க பாஸ்….

0
138
உணர்வின் பதிவுகள்: கனவுப் பெண்
பெண் என்பவள் ஒரு அதிசய பிறவி அவளால் ஒரு அரசாங்கத்தையே ஆளுமை செய்யவும் முடியும், அடுப்பறையில் அருமையாக சமைக்கவும் முடியும். இதை ஆண்களும் தான் செய்கிறார்கள் இதில் என்ன அதிசயம் என்று நீங்கள் கேட்கலாம்? ஆனால் பெண்கள் எப்போதுமே அனைத்து விதமான விஷயங்களிலும் உணர்வுபூர்வமாக இணைந்து செயல்படுவார்கள் ஆண்கள் அதை பிராக்டிகல் எனக் கூறப்படும் நடைமுறை குணத்தோடு கொண்டு பார்ப்பார்கள் . அந்த குணமும் அவசியம்தான் ஆனால் அதிலும் உணர்வின் கலப்பு இருந்தால் வாழ்க்கையின் சிறப்பை முழுமையாக உணரமுடியும்.
ஓவியம் – சொல்வனம் | இதழ் 224
காதல் அடடா!!  என்ன ஒரு அழகிய உணர்வு. ஆண், பெண், ஜாதி ,மத பேதமின்றி தமிழகத்தின் மின் வெட்டை போல் முன்னறிவிப்பின்றி எவர் வாழ்விலும் நடக்கக் கூடிய அழகான நிகழ்வு   ஆரம்பத்தில் மானும் தேனுமாக இருந்த காதலர்கள் போகப்போக எலியும் பூனையுமாக மாறுகிறார்கள் இதற்கு முழுமுதல் காரணம் மேல் குறிப்பிட்டுள்ள உணர்வு சார்ந்த மாற்றங்கள் தான், அது ஒருபுறமிருக்க காதல் திருமணத்திற்கு தடை போடும் பெற்றோர்களே ஊரும் நாடும் போற்றும் படி திருமணம் செய்த உங்கள் பிள்ளை திருமணத்துக்குப் பின் ஒரு மனமுறிவு என்றால் உங்களை பாதிக்குமா அல்லது ஊரையும் நாட்டையுமா??  நாலு சொந்த பந்தம் முன்பு நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு நாலு சுவருக்குள் என் பிள்ளை நன்றாக வாழ வேண்டும் என்ற எண்ணங்கள், அது எந்தவகையான திருமணமாக இருந்தாலும் சரி. உப்பில்லாத உணவு மட்டும் குப்பைக்கில்லை அன்பில்லா வாழ்க்கையும் அப்படித்தான்
திண்ணையில் அமர்ந்திருக்கும் பெண் ...
நண்பர்களே நீங்கள் குவளையில் நீராய் இருக்கும் வரை அனைவரும் உங்களை சீண்டித்தான் பார்ப்பார்கள் , காற்றாற்று வெள்ளமாய் உங்கள் பாதையில் வரும் அத்தனை துன்பங்களையும் உடைத்தெறிந்து முன்னேறி பாருங்கள் ஒரு புது தைரியம் பிறக்கும்.உங்களால் அனைத்தும் சாத்தியமே என்பதை முதலில் நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.
ரிலாக்ஸ் ப்ளீஸ் on Twitter: "அழகிய பெண் ...
நம்மை விட நமக்கு யார் இந்த உலகில் நல்லது நினைக்கப் போகிறார்கள் பெற்றவர்களைத் தவிர அப்படிப்பட்ட பெற்றோர்களிடமே கூட திருமணம் மற்றும் சமூகம் சார்ந்த மற்ற விஷயங்களில் சுயநலத்தின் சாயலைப் பார்க்க முடிகிறது. எனவே இதயத்தில் இரும்பாகவும் இதழில் கரும்பாகவும் இருங்கள். எந்த ஒரு முடிவும் நிறைவேற்றும்  முன் சுய ஆய்வு செய்து கொள்ளுங்கள் நிறைவேற்றிய பின் எது வந்தாலும் எதிர்கொள்ளுங்கள். புறம் பேசுபவர்களை புறம்தள்ளி உங்கள் அகம் பேசுவதைக் கேட்டு முன்னேறுங்கள்.
பிரியதர்ஷினி
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments