எதனாலோ மனமே

0
205
GOOD MOOD OF HAPPY GIRL HD WALLPAPER | Cute girl wallpaper, Happy ...
எழும்பி துள்ளிக்
குதிக்கும் மீனாளின்
மனமோ குதூக்கலத்தை
குத்தகையெடுத்தது எதனாலோ…பரந்த அம்புதியின்
அசைந்தாடும் கயலாய்
உள்ளமோ உவகையோடு
களிப்பில் நடனமாடியது எதனாலோ….வலம்புரி சங்கினுள்
சேகரித்த காற்றின் இசை
செவியில் இன்னிசைக்க
நெஞ்சுருகி போனது எதனாலோ…பாசிபடிந்த பாறையில்
அலைகளின் மோதலில்
சந்தோஷ சிதறல்களாய்
நீர்த்துளியின் சாரலில்
மனம் நனைந்தது எதனாலோ…வானும் நிலவும்
உறவாடிய அரிய
நேசத்தின் நித்திலயொளியில்
நர்த்தனமாடிய
கருவிழிகளில் கனவுப்
பூக்களாய்  காட்சியானதாலோ
காரிகையே……

சசிகலா எத்திராஜ்,
கரூர்…