தேவையான பொருட்கள்:
கோதுமை அரவை -1/2கப்
பால் -2கப்
வெல்லம்-1கப்
தேங்காய் துருவல். -1/4கப்
ஏலக்காய் பொடி -1/4டீஸ்பூன்
பாதாம் பருப்பு-6
முந்திரி பருப்பு-6 (துண்டுகளாக்கி எடுத்துக்கொள்ளவும்)
நெய்-3டீஸ்பூன்
செய்முறை:
கோதுமை ரவையை கடாயில் இரண்டு நிமிடம் லேசாக வறுத்து எடுத்து, ஒரு கப் பால் சேர்த்து குக்கரில் குழைவாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பாதாம் பருப்பை சிறிது சூடான நீரில் அரை மணி ஊறவைத்து எடுத்து தோல்நீக்கி தேங்காய் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்து, வெந்த கோதுமைரவையுடன் சேர்த்துஇரண்டு நிமிடம் கொதிக்க வைத்து மீதமுள்ள பாலை சேர்த்து இறக்கிவத்து கடாயில்நெய் சேர்க்கவும்.
முந்திரி துண்டுகளை வறுத்து எடுத்து, இத்துடன் சேர்த்து கலந்து சூடாகவும் அல்லது குளிரவைத்தோ பறிமாறலாம்.
இந்தப் பாயசம் சத்துநிறைந்து இருப்பதோடு செய்வதும் சுலபம். மகாராஷ்டிர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெயந்தி