கூழைக்காற்றின் சிலிர்ப்புடன்
துயில் கொள்ள ..
நடுநிசியில் ஓர் விசித்திர கனவு
தோன்றியது..
உருவமில்லாத அருவங்களின் குரலொலி செவிப்பறையை கிழித்தது…
சாதகப் பறவைகளின் கலவர ஒலியும் ,நாய்கள் ஊளையிட்டும் எதையோ கூறியது..
ஒற்றை காகத்தின் கத்தலில் ஓராயிரம் காக்கைகள் ஒன்றாக செத்த எலியை கிழித்து கூறுயிட்டு பங்கிட்டன..
வெட்டுக்கிளிகளின் கூட்டமோ வான்கூரையை குத்தகை எடுத்துப் பச்சைப் போர்வையை கிழித்து எறிந்தன…
வல்லூறுவின் பசியோ மான் கூட்டத்தை வேட்டையாடிப் பிரபஞ்த்தின் வெட்டவெளியில்
குருதியே நதியானது …
அசுரர்களோ குருதி போதையேற்றி மமதையுடன் ராட்ச நடனமாடி கும்மாளமிட்டார்கள்…
கனவும் கலைய நிசப்தமான பெருவெளி அறுந்து தொங்கும் பாலத்தின் உக்கிரமான அசுர ஆட்டத்தின் விளிம்பில் நின்றேன்…
கனவுகளும் நினைவுகளும் வாழ்வியலின் நாடகத்தை நடத்தி கழுவேற்றியது……
சசிகலா எத்திராஜ்
கரூர்...
Image credit: freepik.com