இப்படிக்கு நான் !

0
247

Hand painted black woman

பெண்ணியம் பேசி பெண்ணாய் பிறந்ததற்கு என்ன பாக்கியம் செய்தேனோ என்று எண்ணி சிலர் களி கூறும் அதே நொடியில் வேறு ஒரு இடத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் சிசுக் கொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறி தான் வருகிறது .
யாரவள்? பிறந்ததிலிருந்து குடும்ப சூழலுக்கும் சமூக வலைத்தித்திற்குளும் தன் ஆசைகளை புதைத்து, மாதவிடாய் காலத்தில் உயிர் போகும் வலியை அனுபவித்து, பிரசவத்தில் மறு பிறப்பு எடுத்து , தன் வாழ்க்கையை தனக்கென்று வாழாமல் தன் குழந்தைகளுக்காகவும் ,கணவனுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதிலும், சொந்தம் பந்தம் என சிரித்து ,அழுது ,வியந்து தன் வாழ்க்கையை விளக்கில் விழுந்த விட்டில் பூச்சியாய் வாழ்ந்து முடிக்கிறாள்.
அனைவரையும் நம்புவது என்பது என் பெண்ணினத்தின் இயல்பு , ஒவ்வொரு திமிருபிடித்தவள் , மதிக்காதவள் ,வேசி என்று பெயருக்குப் பின்னும் அவள் இதயத்தின் ஆரா குமுறல்கள் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் பசுத்தோல் போர்த்திய புலியாய் சிலர்,  பெண்கள் அதிகபட்சமாய் ஆண்களிடம் எதிர்பார்ப்பது அன்பும் நேரமும் மட்டுமே . போலியாய் பேசி சிரித்து போலியாய் வாழ்க்கையை நடத்தும் ஆடவர்களே உங்களால் போலியையே இவ்வளவு உண்மையாக செய்ய முடிகிறது என்றால் உங்களை நீங்கள் வெறுக்க போகும் நேரம் வெகு தூரத்தில் இல்லை. இன்று அவள் உன்னிடம் ஏமாற்றம் அடைந்திருக்கலாம்  ஆனால் நாளை அவள் சிரித்துக் கொண்டிருப்பாள் நீ உன்னை தொலைத்து தேடிக் கொண்டிருப்பாய்.
பெண்ணே போதும்! மற்றொருவரை நம்பியதும் நம்மை ஒருவர் புறக்கணித்ததும் , உன்னை நீ நேசி , உனக்கான வாழ்க்கையை நீயே வடிவமைத்திடு ,அனைவரின் மீதும் அன்பு கொள், ஒருவரையும் நம்பாதே ,அன்பிற்காக ஓடும் ஓட்டத்தில் உன் தன்மானத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதே பிரசவ வலியைத் தாங்கிய உனக்கு இந்த வழி ஒன்றும் பெரிதல்ல .
இரவெல்லாம் அழுது காலையில் தன் குடும்பத்திற்காகவும் தன் பிள்ளைகளுக்காகவும் கண்ணீரைத் துடைத்து அடுத்த அடி எடுத்து வைக்கும் நீ சிங்கப் பெண்ணே!
நான்,
பிரியதர்ஷினி கோபிகிருஷ்ணன்