உடம்பொடு உயிரிடை

0
299

Young happy girl riding on a swing in the park

புடவைக்கடையில் இரண்டு பெண்கள் தேர்வு செய்ய விழையும் அந்த ஒரு புடவை மீது மூன்றாவது பெண்ணிற்கு தீவிர விருப்பம் வந்து வேகமாக விழுதல், பெண்களின் சாபக்கேடா சராசரி மனநிலையா தெரியவில்லை. இதே மனநிலையை ஆண் தேர்விலும் (அது நண்பனோ, காதலனோ, கணவனோ) பின்பற்றுகையில் எப்படிச் சொல்வது என புரியவில்லை.

அலுவலகம், பள்ளி ,கல்லூரி , வலைத்தளம் போன்ற குறிப்பிட்ட எல்லைக்குள் திரும்பத் திரும்ப சந்திக்கும் சூழலில் அந்த இடத்தில் (அந்த

இடத்தில் மட்டும்) நான்கு பேர் கவனிக்கக் கூடிய, பாராட்டக் கூடிய ஒருவர் மீது பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு விருப்பம் தெரிவிப்பதும் வரிசையில் நிற்பதும் நடக்கிறது. சிலர் மற்றவர்கள் முன்னிலையில் அவன் எனக்கு நெருக்கம் எனக் காட்டுவதற்காகவே நடக்கின்றனர்.

பாராட்டு மட்டும் தெரிவிக்க சொல்லும் உங்கள் மனதை மீறி இடம் கொடுத்து அடுத்தவர் முன் அதையோ அவரையோ அதீத முக்கியத்துவப் படுத்துதல் நடக்கிறது.

இந்த மனநிலையின் ஒரு பகுதியாகத்தான் திரையில் பார்த்த ஒருவரை நேரில் சந்தித்து இந்த ஜென்ம பலனாக (!?) அடைந்து விட பள்ளியில் பயிலும் பெண்குழந்தைகள் பஸ் பிடித்து சென்னையில் திக்குத்தெரியாமல் நின்று காவல்துறை அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்த சம்பவம் நடந்தது . அவர்கள் நல்ல முறையில் வீடு போய் சேர்ந்தது மகிழ்ச்சிதான் எல்லா நேரங்களிலும் இது நடக்குமா? இது, இந்த வேகம்தான் வருத்தமுற வைக்கிறது.

பல்கலைக்கழக வளாகத்தில் ஹீரோவாக வலம் வந்தவன் அவன். பெண்களை மதிப்பதும், இனிக்க பேசுவதும், விதவிதமான உடைகள் அணிவதும் இயல்பு. பெண்களுக்கு பிடித்து போட்டி போட்டு பேசுவதும், அவனுடன் சிற்றுண்டி சாப்பிடுவதும் தொடர்ந்து நடக்கும். இத்தனைப் பெண்களைக் கவர்ந்தவன் அந்த ஒருத்தியையும் கவர்ந்தான்.

நெருங்குகிறார்கள். .. அவளுக்கு ஆனந்தமான ஆனந்தம் இவ்வளவு பேர் விரும்பும் ஒருவன் தன்னிடம் நெருக்கமாகிறான் என்று இறக்கைகள் கட்டாத குறை ஒன்றுதான்… வீட்டிற்கு ஒரே பெண் அவள் . வீட்டில் கூறிவிட்டு அவர்கள் திகைக்க இவள் திருமணம் செய்து கொண்டாள். திருமணம் முடிந்து போராட்டாங்களுக்கு பிறகு ஆறு மாதத்திற்குள் தன் மூச்சை நிறுத்திக் கொண்டாள் நெருப்பில் . வயிற்று குழந்தையோடு.

…. இதன்பின் நீண்ட கதை உள்ளது. ஆனால் நீதி ஒன்றுதான் உள்ளது

சிந்தியுங்கள்.

ஏதோ ஒன்றுக்காக, எதிலிருந்தோ வெளிவருவதற்காக, தங்களைத் தாங்களே சரி செய்ய அல்லது தெரியாமல் கூட பொது இடத்தில் எவனையோ ஒருத்தனை யாரும் உங்களைக் கவனப்படுத்தும் வகையில் கருத்துக்களை லவ் யூக்களை வாரி இறைத்தால் சற்று கவனமாயிருங்கள். அது அவர்களின் தவறும் இல்லை.

உயிர், உறவு, உடைமை இழப்புக்குப் பிறகு ஆழ்ந்த துக்கத்தில் கவலை கொண்டிருக்கும் மனது சட்டென ஏதேனும் ஒன்றிடத்து எதுவும் ஆராயாமல் மிக எளிதாகச் சாய்ந்து விடும் . அந்த ஏதோ ஒன்று போலிச்சாமியார், தகிடுத்த ஆசாமி (இரண்டும் ஒன்றுதான் ), பெண் பித்தர்கள், காசு பொருள் ஏமாற்றும் பேர்வழி என்று எதுவாகவும் இருக்கலாம்.

அதனால் இது போன்ற நிலையில் கூடுதல் கவனமுடன் நலம் விரும்பிகள் அருகாமையுடன் இருப்பது நலம். முதலில் நிதானியுங்கள். பிடித்த ஒருவரோ ஒன்றோ உங்களுக்கு பிடிக்கிறதா மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்பதால் பிடிக்கிறதா உங்களுக்கு பொருத்தமா நிலைத்த விருப்பமா மகிழ்ச்சி கிடைக்குமா செளகரியமாக உணர்வோமா, தற்காலிக பிடித்தமா

இது போன்ற பல கேள்விகளை உங்களுக்குள் கேட்டுக் கொள்ளலாம்….

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு

குறள் விளக்கம்:

இப்பெண்ணோடு எம்மிடத்து உண்டான உறவு, உடம்போடு உயிருக்கு

எத்தகையத் தொடர்பு உண்டோ, அத்தகையது

இப்படியான ஒரு உறவைப் பெற வேண்டியவர்கள் வீணாகக் கூடாது.

அகராதி