எல்லைகளற்ற என் பெருவெளி

0
183

என் எல்லைகளை
வரையறுக்க நீங்கள்
முற்படும் போதெல்லாம்
உங்கள் எல்லைகளைக்
கடக்கிறீர்கள்..
எனினும் ஏனோ
அறியவில்லை நீங்கள்..
எல்லைகளைக் கடத்தல்
எல்லோருக்குமான
பொதுவிதி என்பதை..
வரையறைகள் ஏதுமற்ற
பெருவெளி நோக்கியே
பயணிக்க எத்தனிக்கிறேன்
எல்லைக்கோடுகளை
அழித்து விட்டபடியே..
இயலுமெனில்
இணைந்து கொள்ளலாம்
நீங்களும் – ஏனெனில்
அப்பெருவெளியில்
நீங்களும் நீங்களாயிருப்பீர்கள்
என்னைப் போலவே…

கிருத்திகா கணேஷ் கவிதைகள்