நீ யார்…

0
250

நீ யார்…

உன்னை மேன்படுத்தி நிலைநிறுத்திக்
கொள்ளவதற்கு
எதற்காக
அடுத்தவர்களின் நிலைப்பாட்டை
தடுக்குகிறாய்..

உன் பாதையில்  பூக்களை
தூவி பயணித்துக் கொண்டு
எதற்காக
அடுத்தவர்கள் பாதையில்
முட்களை தூவுகிறாய்…

உன்னுடைய வார்த்தை
ஜாலத்தை நிறுப்பீக்க
எதற்காக
அடுத்தவர்களின் பேச்சை பரிகாசம்
செய்கிறாய்..

உன்னுடைய நிறைகளை
தூக்கிச் சொல்வதற்கு
எதற்காக
அடுத்தவர்களின் குறைகளை
பந்தி விரிக்கிறாய்…

உனக்கு அறிவுக் களஞ்சியம் பெயரைச் சூட்டிக் கொள்ள
எதற்காக
அடுத்தவர்களின் அறிவுக்கு விலை பேசுகிறாய்…

உன் வாழ்க்கை தரத்தை
உயர்த்திக் கொண்டு
எதற்காக
அடுத்தவர்களின் வாழ்கையில்
பல்லாங்குழி ஆடுகிறாய்…

உன்னுடைய சுயத்தோட்டத்திற்கு
வேலியிட்டுக் கொண்டு
எதற்காக
அடுத்தவர்களின் சுயத்தோட்டத்தில் அத்துமீறுகிறாய்…

வரம்பு மீறலான அம்புகள் உனக்கானது
மட்டுமல்ல ..
அது
உன்னிடமும் திரும்ப
பாயும் ஏதோ ஓர் வழியில்..

நீ யார்
என்பதை உணர்த்துவதற்க்கு

சசிகலா எத்திராஜ், கரூர்.